Skip to main content

வால்பாறையில் பேருந்துக்கு முன்பு சென்ற காட்டு உயிரினங்கள்..! 

Published on 31/07/2021 | Edited on 31/07/2021

 

Wild creatures that went before the bus in Valparai ..!

 

கோவை மாவட்டம், வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் யானை, காட்டெருமை, சிறுத்தை, மான், கரடி, சிங்கவால் குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகள் சாலைகளிலும் மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலும் நடமாடுவது வாடிக்கையாக இருந்துவருகிறது.

 

அப்படி நேற்று (30.07.2021) இரவு வால்பாறையிலிருந்து அக்காமலை எஸ்டேட் பகுதிக்குப் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, திடீரென தேயிலைக் காட்டிலிருந்து வெளியில் வந்த இரண்டு முள்ளம்பன்றிகள் தனது தோகை போன்ற முட்களைச் சிலிர்த்து விரித்தவாறு அழகாக சாலையிலேயே பேருந்திற்கு முன்பு சிறிது தூரம் சென்றுகொண்டிருந்தன.

 

அந்த அழகிய காட்சியைப் பயணிகள் ஆச்சர்யத்தோடு ரசித்துக்கொண்டிருந்தபோது அந்த முள்ளம்பன்றிகள் அருகேயிருந்த தேயிலை செடிகளுக்குள் சென்று மறைந்தன. இதைக் கண்டு பேருந்தில் பயணித்த பயணிகள் சந்தோசமும் உற்சாகமும் அடைந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 
News Hub