Published on 06/05/2023 | Edited on 06/05/2023
தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும் மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. மேலும், தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக மே 5, 6, 7-ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, மே 8-ம் தேதி சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் பரவலாக மழை பெய்தது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, திருப்பத்தூர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.