
திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்ததற்கான காரணத்தை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இன்று காலை திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து என்று அறிவித்த தலைமை தேர்தல் ஆணையம் அதற்கான காரணத்தை அந்த அறிவிப்பில் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது அதற்கான காரணத்தை அறிவித்துள்ளது.
அதில், கடந்த டிசம்பர் மாதம் 3-ம் தேதி தமிழக தலைமைச்செயலர் கிரிஜா வைத்தியநாதன், கஜா புயல் நிவாரணப் பணிகளை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தார், மேலும் 2019, ஏப்ரல் மாதம் வரை இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
மேலும் திருவாரூர் உட்பட 19 தொகுதிகான இடைத்தேர்தலையும் ஏப்ரல் மாதம் வரை நடத்தப்படமாட்டாது என்றும் தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.