இன்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிப்பது மீதான விவாதம் முடிவடைந்த நிலையில் தமிழக முதல்வர் பதிலுரை வழங்கினார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை வழங்க வழிவகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேரவை நிகழ்வுகள் முடிவதற்கு முன்பாக பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக நேற்று (10/01/20250 தமிழக முதல்வருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. பொள்ளாச்சி விவகாரத்தில் யார் சொல்வது உண்மை; எப்போது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது தொடர்பான விவாதம் நடைபெற்று இருந்தது.
இது தொடர்பாக நேற்று முதல்வர் சட்டப்பேரவையில் சவால் விட்டிருந்தார். பொள்ளாச்சி வழக்கில் அதிமுக அரசு வழக்கு பதிவு செய்தது எப்பொழுது? குற்றவாளிகள் எப்போது கைது செய்யப்பட்டனர் உள்ளிட்ட ஆதாரத்தை நான் சபாநாயகரிடம் ஒப்படைக்கிறேன். நீங்கள் ஆதாரத்தை ஒப்படைக்க தயாரா என்று சவால் விட்டு இருந்தார்.
அதன்படி இன்று (11/01/2025) முதல்வர் தரப்பில் சபாநாயகரிடம் ஆதாரங்கள் ஒப்படைக்கப்பட்டது. அதேபோல் அதிமுக சார்பிலும் பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக எடுத்த நடவடிக்கைகள் தொடர்பான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இன்று பேரவை கூட்டம் முடிவதற்கு முன்பாக அவை முன்னவர் துரைமுருகன் எழுந்து இந்த பொள்ளாச்சி விவகாரத்தில் சபாநாயகருடைய தீர்ப்பு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு, 'பொள்ளாச்சி விவகாரத்தில் இரண்டு தரப்பு அளித்து ஆவணங்களை சரி பார்த்தில் பொள்ளாச்சி விவகாரத்தில் 12 நாட்களுக்குப் பிறகுதான் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது என்று முதல்வர் கொடுத்த ஆதாரங்களை சரி பார்த்ததில் முதலமைச்சர் குறிப்பிட்டது உண்மை. எதிர்க்கட்சித் தரப்பு கொடுத்த ஆதாரங்கள் திருத்தியளிக்கும் வகையில் இல்லை என தீர்ப்பு வழங்கினார். அதனைத் தொடர்ந்து பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.