Published on 28/09/2021 | Edited on 28/09/2021
![Who is the new Registrar of Anna University?](http://image.nakkheeran.in/cdn/farfuture/Q7SUtsM-V3_DKirFkUB4OUUjdAjblUC8gkEUWR6sR18/1632796272/sites/default/files/inline-images/anna%201_0.jpg)
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளரைத் தேர்வு செய்ய சிண்டிகேட் கூட்டம் இன்று (28/09/2021) நடைபெற உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் வேல்ராஜ் தலைமையில் இன்று காலை 11.00 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர்கள் பதிவாளரைத் தேர்வு செய்வது தொடர்பாகவும், அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்ட மாற்றம், பேராசிரியர் நியமனம் தொடர்பாகவும் ஆலோசிக்கின்றனர்.
இக்கூட்டத்திற்குப் பிறகு பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பல்கலைக்கழகத்தின் பதிவாளராக உள்ள ராணி மரிய லியோனி வேதமுத்து பணி ஓய்வு பெற உள்ளதால் புதிய பதிவாளர் தேர்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.