காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்துள்ளது ஆதவப்பாக்கம் கிராமம் செய்யாற்றின் கரையில் அமைந்துள்ள இந்தக் கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன.
அந்தக் கிராமத்தை சேர்ந்தவர் ராஜம்மாள் உத்திரமேரூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி பின்பு பதவி உயர்வு பெற்று தற்சமயம் காஞ்சிபுரம் மாவட்ட ஆசியர் வளாகத்திலுள்ள நில அளவீடு தாசில்தாராக பணியாற்றிவருகிரார்.
ஆதவப்பாக்கம் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அரசு பள்ளியின் பின்புறம் இந்த வட்டாட்சியருக்கு சொந்தமான விளை நிலம் உள்ளது. இந்தநிலையில் ராஜம்மாள் அந்தநிலத்திற்கு அங்குள்ள செய்யாற்றிலிருந்து, சட்டவிரோதமாக ஆழ்துளை அமைத்து, ஆற்றிலிருந்து சட்டவிரோதமாக ஆயில் மோட்டார் மூலம் , பள்ளி விளையாட்டு திடல் வழியே பிவிசி குழாய் பதித்து தண்ணீர் திருட திட்டமிட்டு, அந்த கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் சவிதா மற்றும் கிராம உதவியாளர் ராமன் ஆகியோர் உதவியுடன் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளி வளாகம் வழியே பள்ளம் தோண்டி குழாய் பதித்துள்ளனர். அதில் அந்த கிராமத்து முக்கிய தார்ச்சாலை, மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகம் நடுவில் பள்ளம் தோண்டி இரவோடு இரவாக குழாய் பதித்துள்ளனர்.
பள்ளிக்கு சுற்றுசுவரோ அல்லது வேறு விரிவாக்க கட்டுமான பணிகளோ மேற்கொள்ளும்போது இது மிகவும் இடையூறாக இருக்கும் என்றும், வட்டாச்சியர் என்ற துணிவில் அதிகாரிகளின் துணையோடு இதுபோன்ற சட்டவிரோத செயலில் ஈடுபட்ட வட்டாச்சியர் ராஜம்மாள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இதுதொடர்பாக பேசினாலோ, புகார் அளித்தாலோ தாசில்தார் ராஜம்மாள் மிரட்டி வருகிறார். அதேபோல அதை படம் பிடித்த செய்தியாளர் தாசில்தாரின் மகனால் மிரட்டப்பட்டு அவர் எடுத்த போட்டோவும் டெலிட் செய்து மிரட்டி அனுப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. மேலும் தாசில்தார் ராஜம்மாள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு நெருக்கமானவர் என்ற போர்வையில் தான் நினைத்ததை சாதிப்பவர் என்ற பெயரும் உண்டு.
இது தொடர்பாக தாசில்தார் ராஜமாளிடம் பேசினோம் " ஆமாங்க என்னோட மகன் தான் பைப் பதிச்சிட்டான், நான் வேண்டானு சொன்னேன் அவன் கேட்கவில்லை, செய்தியெல்லாம் வேண்டாம் நேர்ல வாங்க உங்கள கவனிச்சுகிறேன், என்ன பன்னனூம்னு சொல்லுங்க பார்த்துகலாம்.... என அசால்ட்டாக பேசிகிட்டே போனை கட் செய்தார் அவர். சட்டவிரோத செயலை செய்தது மட்டுமில்லை, நம்மிடமே பேரம் பேசினார் தாசில்தார், சட்டத்தை மதித்து செயல்பட வேண்டிய இவர்களே சட்டவிரோத செயல்லி ஈடுபட்டால் யார் கேட்பது ...?
இது தொடர்பாக சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் சவிதாவிடம் பேசினோம், பதில் பேச மறுத்துவிட்டார். சம்பவம் தொடர்பாக மாவட்டாச்சியர் பொன்னையாவை தொடர்பு கொண்டோம் அவர் தொடர்பில் வரவில்லை.