திருமுட்டம் அருகே வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை சரியான முறையில் கனக்கெடுக்க வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
திருமுட்டம் வட்டம் ஆதிவராகநல்லூர் கிராமத்தில் தமிழக அரசு அறிவித்த வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைவருக்கும் ரூ 2 ஆயிரம் என அறிவித்த உடன் வறுமைக்கோடு பட்டியலில் என் பெயர் எங்கே எனக் கேட்டு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆதிவராக நல்லூர் வறுமை ஒழிப்பு சங்க கட்டிடத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
வறுமைக்கோடு பட்டியலில் 2008 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நிலம் உள்ளவர்கள் மாடி வீடு வைத்திருப்பவர்கள் அரசு ஊழியர்கள் என பட்டியலில் உள்ளது ஏழை விவசாயக் கூலித் தொழிலாளர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
எனவே என் பெயர் வறுமைக்கோடு பட்டியலில் எங்கே எனக் கேட்டு விவசாயத் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தை நடத்தினர். முற்றுகை போராட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் மாவட்ட குழு உறுப்பினர் ஆதிமூலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட குழு உறுப்பினர் தேவேந்திரன் உள்ளிட்ட வறுமைகோட்டுக்கு கீழேயுள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனர்.