குமாி மாவட்டம் ஆலம்பாறையில் டி.ஒய்.எப்.ஐ. நிா்வாகிகளின் வீடுகள் மீது மாா்த்தாண்டம் காவல் துறையினா் தாக்குதல் நடத்தியதில் பல வீடுகள் சேதமடைந்தன. அந்த வீடுகளையும் பாா்வையிட்டு பாா்வையிட்டு நிா்வாகிகளுக்கு ஆறுதல் கூறினாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினா் ஜீ.ராமகிருஷ்ணன்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் பேசும் போது.... தமிழகத்தில் துக்ளக் தா்பாா் ஆட்சி தான் நடக்கிறது. நீதிமன்றத்தை அவதூறாக பேசிய எச்.ராஜா வை கைது செய்ய நீதிமன்றமே உத்தரவிட்ட போதும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.ராஜா ஆளுநரை சந்திப்பதோடு ஊா்,ஊராய் சுற்றிக் கொண்டிருக்கிறாா்.
நிதிஆயோக் பாிந்துரைப்படி 15- க்கும் குறைவான மாணவா்களை கொண்ட அரசு பள்ளிகளை மூட வேண்டுமென்று மத்திய அரசின் உத்தரவை ஏற்று தமிழகத்தில் 3000 அரசு பள்ளிகளை மூட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் ஏழை எளிய மாணவா்களின் எதிா்காலம் கேள்வி குறியாக உள்ளது. இதனால் அரசு பள்ளிகளை மூடும் முடிவை கைவிட வேண்டும்.
மாநில் அரசு ஸ்டொ்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது. நீா், நிலம், காற்றை மாசுப்படுத்தி மக்கள் வாழ்வாதாரத்தை அழித்து கொண்டு வரும் வரும் வளா்ச்சியை அனுமதிக்க முடியாது. மாநில அரசின் எல்லாதுறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது.
மத்திய அரசு கண்ணாமூச்சு விளையாட்டு போன்று சி.பி. ஐ யை மாநில அரசை கட்டுபடுத்தும் ஆயுதமாக வைத்துள்ளதே தவிர ஊழலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநில அரசு மத்திய அரசின் கொள்கையை அப்படியே அமல்படுத்தி வருகிறது. மாநில மின்உற்பத்திக்கும் மாநில மின்சார தேவைக்கும் மிகுந்த இடைவெளி உள்ளது. காற்றாலை உட்பட தனியாா் மின் உற்பத்தி நிலையங்களில் ஓப்பந்தம் மூலம் மின்சாரம் வாங்கும் போது முறைக்கேடு நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.