காரைக்காலில் மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதியை தடை செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்காலில் இயங்கிவரும் மார்க் துறைமுகத்தில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி அதிக அளவு அப்படியே கொட்டிவைப்பதால் நிலக்கரி துகள்கள் காற்றில் கலக்கிறது. இதனால் நாகப்பட்டினம் நாகூரை சுற்றியுள்ள பொதுமக்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்படுகிறது என மக்களிடையே குற்றச்சாட்டு எழுந்துவந்தது.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு நாகூரில் திடீரென பொதுமக்கள், இளைஞர்கள் என அனைவரும் கையில் மொபைல் டார்ச்சுடன் காரைக்கால் மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதிக்கு தடை விதிக்குமாறு போராட்டத்தில் இறங்கினர். இதனால் அங்கு சற்று பரபரப்பு நிலவியது.
பலமணிநேரம் நடந்த இந்த போராட்டத்தில் போலீசார் பல்வேறு பேச்சுவாரத்தை நடத்தியும் பொதுமக்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்ளாததால் குண்டுக்கட்டாக அனைவரையும் கைது செய்து அப்புறப்படுத்தினர்.