டெல்டா மாவட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து திட்டங்களின் மூலம் கிடைத்த பயன்கள் என்னென்ன என தஞ்சாரில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் மத்திய அரசின் கூடுதல் செயலாளர் பிரமோத் குமார் பதக் சரமாறியாக கேள்வி கேட்டது மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை சடசடக்க வைத்துவிட்டது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நீராதாரங்களை மேம்படுத்துவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமை வைத்தார். கூட்டத்தில் மத்திய அரசு கூடுதல் செயலாளர் பிரமோத்குமார் பதக் பேசினார் அப்போது ," நிலத்தடி நீரை சேமிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன, அதற்கான ஆதாரங்கள் எங்கே," என்றார், அதற்கு பதில் அளித்த ஆட்சியர் அண்ணாதுரை, "மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு பணிகள் செய்யப்பட்டு நிலத்தடி நீர் சேமிக்கப்பட்டுள்ளது," என்றார்.
அடுத்த நொடியே ",அப்படியானால் இந்த திட்டத்துக்கு இதுவரை செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு, பணிகள் முடிந்திருந்தால் அதனால் கிடைத்த பயன்கள் என்னென்ன, இதுதொடர்பான என்னென்ன டாக்குமெண்டேஷன் உள்ளது. தூர்வாரிய இடத்தினை மீண்டும் மீண்டும் தூர்வாரி இருக்கிறீர்களா, அதன் அறிக்கை ஆவணங்கள் எங்கே என கேள்வி மேல் கேள்விக்கேட்டு துளைத்தெடுத்தார்.
இதனை சற்றும் எதிர்பார்த்திடாத மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையும், சக அதிகாரிகளும் திக்குமுக்காடி போனார்கள், அது, இது, இப்படி, அப்படி என உளரி தள்ளிய கலெக்டரை கண்டு தலையில் தட்டிக்கொண்ட செயலாளர் அமைதியாக இருந்தார், ஒரு வழியாக சமாளித்து விரைவில் டாக்குமெண்டேஷன் தயாரித்து வழங்குகிறோம் என்றார் மாவட்ட ஆட்சியர். இந்த சம்பவம் விவசாயிகள் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.