தேர்தல் வரும்போது பாஜகவுடன் கூட்டணி குறித்து முடிவு: எடப்பாடி பேட்டி
பாஜகவுடன் கூட்டணி குறித்து உள்ளாட்சி தேர்தலின் போது முடிவு எடுப்போம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
பாஜக உடன் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு முதலமைச்சர் பழனிச்சாமி இவ்வாறு பதிலளித்தார். தேர்தல் தேதி அறிவித்தபின் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.
134 எம்.எல்.ஏக்களுடன் அதிமுக அரசு பெரும்பான்மையுடன் உள்ளது என முதல்வர் பழனிச்சாமி கூறினார். முன்னதாக பாஜகவுடன் கடந்த காலங்களில் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைத்திருந்ததாகவும், இனியும் கூட்டணி வைப்பதில் தவறில்லை என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருந்தார். அவருடைய பேட்டியின் அடிப்படையிலேயே முதல்வர் எடப்பாடியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.