Skip to main content

நட்ட மரம் என்னாச்சின்னு டுவிட்டரில் கேட்கறாங்க – நடிகர் விவேக் பேச்சு

Published on 22/07/2018 | Edited on 27/08/2018

 

vi

 

அரசியலுக்கு அப்பாற்பட்ட அமைப்பாக திருவண்ணாமலை நகரில் தூய்மை அருணை என்கிற அமைப்பை தொடங்கி, நகரை 45 பகுதிகளாக பிரித்து தூய்மை பணியை கடந்த 2017 அக்டோபர் மாதம் முதல் செய்து வருகிறார் முன்னால் அமைச்சரும், திமுக மா.செவுமான எ.வ.வேலு.


இந்த தூய்மை அருணை அமைப்பில் திமுகவினர் பசுமை பாதுகாவர்கள் என்கிற பெயரில் ஒவ்வொரு பிரிவிலும் ஒரு பகுதி ஒருங்கிணைப்பாளர் தலைமையில் 30 களப்பணியாளர்கள் என 35 பகுதிகளில், கழிவுநீர் கால்வாய் தூர் வாருவது, தெருக்களில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்து அள்ளிப்போடுவது, தெருக்களில் கண்டமேனிக்கு குப்பை கொட்டாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் இந்த தூய்மை காவலர்கள் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை தோறும் தொடர்ச்சியாக செய்து வருகின்றனர்.


இந்த தூய்மை அருணை அமைப்பின் சார்பில் நகரில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை 22.7.2018 ந்தேதி தொடங்கினர். அந்த விழாவினை திரைப்பட நடிகர் விவேக் வந்து தொடங்கிவைத்தார்.

 

vivek

 

இந்த விழாவில் பேசிய அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எ.வ.வேலு எம்.எம்.ஏ, 27.10.2018 ந்தேதி இந்த அமைப்பை முன்னால் சென்னை மாநகர மேயரும், தற்போதைய எம்.எல்.ஏவுமான வைத்து இந்த திட்டத்தை தொடங்கி சேவையாற்றி வருகிறோம். அதன் ஒருபகுதியாக இன்று 1 லட்சம் மரக்கன்று நடும் விழாவினை தொடங்குகிறோம்.

 

இந்த மரம் நடும் விழா தொடக்கத்துக்கு என்.எஸ்.கிருஷ்ணன் போல் சினிமாவில் முற்போக்கு கருத்துக்களை கூறிவரும் நடிகர் விவேக் தான் பொருத்தமானவர் என அவரை அணுகி அழைத்துவந்தோம். திருவண்ணாமலை நகர மக்கள் தங்களது பிறந்தநாள்க்கு மரம் நட்டு வளர்க்க விரும்பினால், எங்கள் தூய்மை அருணை அமைப்புக்கு போன் செய்து தகவலை கூறினால் அப்பகுதி பொறுப்பாளர்கள் வந்து பார்த்துவிட்டு மரக்கன்றும், அதை பாதுகாப்பதற்கான கூண்டும் வழங்குவார்கள். அதேப்போல் பொதுமக்கள் தங்களது காலியான இடங்களில் மரங்களை நட்டு வளர்க்க விரும்பினால் தேவையான அளவு மரக்கன்றும், கூண்டும் வழங்கப்படும். ஒராண்டு கழித்து மரங்கள் வளர்ந்துயிருப்பதை பார்த்து பசுமை பாதுகாப்பு விருதும், சான்றிதழும் வழங்கப்படும் என்றார்.


சிறப்புரையாற்றிய நடிகர் விவேக், 1930ல் பால்பிராண்டன் என்கிற ஆங்கிலேயர் திருவண்ணாமலைக்கு வந்து ரமணமகிரிஷியை பார்த்த அவர் அவரைப்பற்றி புத்தகம் எழுதியபின்பே திருவண்ணாமலை பற்றி உலகம் அறிந்தது. அப்படிப்பட்ட நகரில் தூய்மை அருணை அமைப்பினர் சேவை செய்வது பாராட்டதக்கது, அதோடு மரங்கள் நடும் திட்டம் அற்புதம். மறைந்த முன்னால் குடியரசுத்தலைவர் அப்துல்காலம் அவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்ட தற்கிணங்க, தமிழகத்தில் 1 கோடி மரங்கள் நடும் பணியில் உள்ளேன். இதுவரை 29 லட்சம் மரக்கன்றுகள் நட்டுள்ளேன், இப்போது நடப்படும் 1 லட்சம் மரக்கன்றுகள் என் கணக்கில் சேர்த்துக்கொண்டால் 30 லட்சமாகிவிடும். 8 ஆண்டுகளில் 30 லட்சம் மரங்கள் நட்டுள்ளேன். நான் இதுவரை நட்டுள்ள 29 லட்சம் மரங்களும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று தான் நட்டுள்ளேன், வழங்கியுள்ளேன். இனியும் அப்படித்தான் செய்வேன். என்னிடம் பேஸ்புக், டுவிட்டரில் பலர் வந்து, நீங்க வைக்கற மரங்கள் எல்லாம் எங்கயிருக்குன்னு கேள்வி கேட்கறாங்க. மரத்த வச்சவனே தண்ணீர் ஊத்தனம்ன்னு பாட்டுயிருக்கு. ஒருமரம்ன்னா தொடர்ந்து ஊத்தலாம். 30 லட்சம் மரத்துக்கு எங்க ஊத்தறது. அதனால் மற்றவர்களும் அந்த பணியை செய்யனும். அப்போது தான் நம்நாடு பசுமையாக இருக்கும் என்றார்.


நிகழ்ச்சியின் இறுதியில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகளை தந்து ஊக்குவித்தார் நடிகர் விவேக். செய்தியாளர்களிடம் பேசும்போது, மரங்களை வெட்டிவிட்டு 8 வழிச்சாலை போடுவது மனதுக்கு வருத்தமாக உள்ளது என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“முசோலினி எதை செய்தாரோ அதைத்தான் மோடி செய்கிறார்” - கே.எஸ்.அழகிரி

Published on 03/11/2023 | Edited on 03/11/2023

 

KS Alagiri says Modi is doing what Mussolini did

 

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் அண்ணா நகர், தியாகராய நகர், கீழ்ப்பாக்கம், வேப்பேரி உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

 

இதேபோன்று திருவண்ணாமலையில் உள்ள அமைச்சருக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்கள் மற்றும் வீடுகளிலும் இந்தச் சோதனையானது நடைபெற்று வருகிறது. காலை முதலே நடந்துவரும் இந்தச் சோதனையானது, ஏற்கனவே அமைச்சர் எ.வ. வேலு மீது இருக்கும் சொத்துக்குவிப்பு வழக்கின் காரணமாக நடத்தப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் எதன் அடிப்படையில் வருமான வரிச் சோதனை நடைபெறுகிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. சோதனை முடிவில் இது குறித்த முழு விவரமும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, “இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் வளர்ச்சி பணிகள் நடைபெறுகிறது. ஆனால், வருமான வரித்துறை சோதனை என்பது எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் மட்டுமே நடக்கிறது. பா.ஜ.க ஆளுகின்ற மாநிலங்களுக்கு அவர்கள் செல்வதே கிடையாது. இதன் மூலம் இந்த சோதனை என்பது விதிமுறை மீறல் என்று தெளிவாகத் தெரிகிறது.

 

எதிர்க்கட்சிகளை கையாளுவதற்காக ஹிட்லர் கையாண்ட வழியைத்தான் மோடி கையாண்டு இருக்கிறார். முசோலினி எதை செய்தாரோ அதை மோடி செய்கிறார். பா.ஜ.க ஆளும் மாநிலங்களிலோ அல்லது பா.ஜ.க ஆதரவு தருகின்ற மாநிலங்களிலோ இந்த சோதனை நடந்திருந்தால் வரவேற்கலாம். தமிழகத்தில் கூட முன்னாள் அதிமுக அமைச்சர்களின் மீதான குற்றச்சாட்டின் விசாரணை கோப்புகளுக்கு ஆளுநர் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்தி வருகிறார். 

 

 

 

Next Story

 'சின்னக் கலைவாணர் விவேக் சாலை' - பெயர்ப்பலகை திறப்பு 

Published on 03/05/2022 | Edited on 03/05/2022

 

vivek

 

நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த ஆண்டு உடல்நலக் கோளாறு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது நினைவாக அவர் வசித்துவந்த சென்னை பத்மாவதி நகர் பகுதியில் உள்ள பிரதான சாலைக்கு 'சின்னக்  கலைவாணர் விவேக் சாலை' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்த ஞாயிறன்று வெளியிட்டது. அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த நடிகர் விவேக்கின் மனைவி இதுதொடர்பாக கோரிக்கை வைத்த நிலையில், இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

 

இந்த நிலையில், 'சின்னக் ​கலைவாணர் விவேக் சாலை'யின் பெயர்ப்பலகையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார். சென்னை மேயர் பிரியா ராஜன் உள்ளிட்ட அதிகாரிகளும் நடிகர் விவேக்கின் குடும்பத்தாரும் உடனிருந்தனர். அதன் பின்னர், நடிகர் விவேக்கின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.