தூத்துகுடியில் நடைபெற்று வரும் நதிநீர் இணைப்பு திட்டம் நிறைவு பெற்றதாக கூறப்படும் இடத்தில் நேரில் ஆய்வு செய்த சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, பாலம் கட்டும் பணிகள் நிறைவடையாததால் அங்குள்ள அதிகாரிகளை எச்சரித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் அரசூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட எம்.எல் தேரியில் 12 கொடியே 21 லட்சம் மதிப்பில் 4,300 மீட்டர் நீளத்தில் தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு நதிநீர் இணைப்பு திட்டத்தின் கால்வாய் அமைக்கும் பணிகள் முடிந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு நேரில் பார்வையிட்டார். ஆனால் பாலம் கட்டும் பணிகள் முடியாமல் இருந்ததை கண்டு அதிர்ந்த அப்பாவு, பணிகள் நிறைவு பெறாமலே நிறைவு பெற்றதாக கூறிய நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளரை கடிந்துகொண்டார்.
அதிகாரியைப் பார்த்து, ''இந்த பாலம் என்ன ஸ்டேஜ்ல இருக்கு. என்ன ஏமாத்துறிங்களா.. அப்போ சொல்ல வேண்டியதுதானே பாலம் வேல நடக்கலைன்னு. தண்ணி எப்படி வரும்னு சொல்லுங்க... பாலம் இல்லாம தண்ணி வருமா? பாலத்துக்கு ஒரு சின்ன வேலையும் பாக்கமாக சொல்றிங்க... எங்க காண்ட்ராக்ட்காரர்'' என டோஸ் விட்டார்.