இந்திய ஜனநாயக கட்சி பொதுக்குழு செயற்குழு திருச்சியில் எஸ்.ஆர்.ஓ. நட்சத்திர விடுதியில் நடைபெற்றது .
காலையில் கட்சி நிர்வாகிகளுடன் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இன்று மாலை பொதுகுழு கூட்டம் நடைபெறுகிறது. உணவு இடைவேளையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அந்த கட்சியின் தலைவர் பாரிவேந்தர்.
தமிழகத்தில் நல்ல கருத்துக்கள் உள்ள கட்சி வேறு எதுவும் கிடையாது நல்ல கருத்துக்கள் மெதுவாதான் மக்களிடம் கொண்டு போய்ச் சேரும் . நல்ல கருத்துக்கள் மக்களிடம் சென்றடைய காலதாமதமாகும் . அப்படி நல்ல கருத்துள்ள கட்சி எங்கடைய கட்சி தான். வருகிற தேர்தலில் ஏற்கனவே தோழமையுடன் உள்ள கட்சியுடன் தொடர்வதா அல்லது புதிய கட்சியுடன் கூட்டணி வைப்பதா என்பதை பொதுக்குழுவில் உறுப்பினர்கள் ஆலோசனை செய்யப்படும்.
நாங்கள் மக்களுக்கு செய்யும் சேவை எல்லாம் எங்கள் வருமானத்திலிருந்து கொடுத்தது. ஆனால் மற்றவர்கள் கொடுத்தது மக்களின் வரிப்பணத்திலிருந்து கொடுப்பது. ஒருவேளை அவர்கள் வருமானத்தில் இருந்து கொடுக்கிறது என்று சொன்னால் அரசியலில் வந்து சம்பாதித்த பணத்தை தான் கொடுக்கிறார்கள்.
நாங்கள் தேர்தலில் போட்டியில் பணம் கொடுக்க கூடாது என்கிற உணர்வோடு இருக்கிறோம். எல்லோரும் தேர்தலில் ஓட்டு போட வேண்டும் என்று எங்கள் பல்கலைகழக மாணவர்கள் மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழகத்தில் கஜாபுயலில் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் படிக்கும் மாணவர்களுக்கு மூன்றாண்டுகள் படிப்புக்கான செலவு நிர்வாகம் ஏற்றுக் கொண்டது அதற்கான செலவும் 45 கோடி ஆகும்.
நாங்கள் 8 வருடங்களாக மக்களின் நம்பிக்கையை பெற்ற உறுப்பினர்களை சேர்த்து வருகிறோம். இருக்கும் கூட்டணியோடு நாங்கள் ஆரம்ப காலத்தில் இருந்தே இருக்கிறோம். ஆனால் எங்களுக்கு கொடுக்க வேண்டிய உரிய மரியாதையை , அங்கீகாரத்தை கொடுக்கவில்லை. பாஜகவுக்கு கடந்த காலங்களில் நாங்கள் எவ்வளவோ செய்திருக்கிறோம். மோடி, அமித்ஷாவை எனக்கு நன்கு தெரிந்திருந்தும் தமிழக தலைவர்கள் எங்களை புறக்கணிப்பது போல செயல்பட்டனர்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் கேட்கும் தொகுதிகளின் எண்ணிக்கையுடன், பழைய மரியாதையையும் சேர்த்து கொடுத்தால் பாஜகவுடன் கூட்டணியை தொடர்வது குறித்து பரிசீலிப்போம் என்றார்.