திருமணத்தை நிறுத்திய காதலி: தலைமறைவான காதலன்
சுவாமிமலை கோயிலில் நடக்க இருந்த காதலனின் திருமணம் காதலியின் தர்ணா போராட்டத்தால் நிறுத்தப்பட்டது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கோவிலாச்சேரி கிராமத்தை சேர்ந்தவன் பாபுராஜன். இவர் ஒரத்தநாட்டை சேர்ந்த துர்க்காதேவியை கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாகை மாவட்டம் வேளாங்கன்னி ஆலயத்தில் திருமணம் செய்து, கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்திருக்கின்றனர். இந்த சூழலில் நான்கு மாத கர்ப்பவதியாக இருப்பதாகவும் துர்க்காதேவி கூறுகிறார்.
இந்த நிலையில் துர்க்கா தேவிக்கு தெரியாமல், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள வீசலூர் கிராமத்தை சேர்ந்தை சேர்ந்த சங்கீதா என்கிற பெண்னை திருமணம் செய்ய நிச்சயத்திருக்கின்றனர். இது துர்க்காதேவிக்கு தெரியவர 19.6.2017 அன்று கும்பகோணம் அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.
தனது திருமணத்தை நிறுத்தக்கூடாது என கும்பகோணம் உரிமையியல் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார் பாபுராஜன். அந்த மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். மேல்முறையீடாக மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
இதற்கிடையில் குறிபிட்ட தேதிபடியே இன்று 6ம் தேதி சுவாமிமலை கோயிலில் திருமண ஏற்பாடு நடந்தது.
இதனை கேள்விப்பட்டு அங்கு சென்ற துர்க்காதேவி கோயில் வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். சுவாமிமலை போலிசார் விரைந்து வந்தனர். இந்த செய்தி கேட்ட பாபுராஜனும், அவரது பெற்றோர்களும் தலைமறைவாகினர். அவர்கள் மீது கடந்த 1ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் கைது செய்தாக வேண்டிய நிலையில் பாபுராஜனை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
க.செல்வகுமார்