

இந்திய தேசம் 72வது குடியரசு தின விழாவை மிக கோலாகலமாகவும் சிறப்பாகவும் கொண்டாடி வரும் நிலையில் திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்த வேர்கள் அறக்கட்டளை மற்றும் சைபர் தமிழ் என்ற கல்வி நிறுவனம் சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் குழந்தைகள் தங்களுடைய வாழ்வில் எப்போதும் மீன் பிடிக்க கற்றுக் கொள்ளக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்றும் பணம் என்பதைத் தாண்டி கல்வி என்பது முக்கியம் என்றும் அந்தக் கல்வியின் மூலம் இந்த உலகத்தின் தலைசிறந்த தலைவர்களையும் தலைசிறந்த ஜனநாயகத்தையும் உருவாக்க முடியும் என்பதை மாணவர்கள் எடுத்துக்கூறி தங்களுடைய குடியரசு தினவிழாவை சிறப்பாக கொண்டாடினார்கள். இந்த விழாவில் அப்பகுதி மக்கள் அனைவரையும் அழைத்து குழந்தைகள் கொண்டாடிய இந்த குடியரசு தினவிழாவில் நாங்கள்தான் இந்த தேசத்தின் அடுத்த தலைமுறை நாங்கள் எங்களுடைய கல்வியில் மட்டும் சிறந்து விளங்க போவதில்லை எங்களைப் போன்றவர்களை நாங்கள் உருவாக்கப் போகிறோம் என்று தங்களுடைய உறுதிமொழியை இந்த குழந்தைகள் எடுத்துள்ளனர்.