Skip to main content

நாங்கள் பிரிட்டிஷ் போலிஸ் என்கிறார்கள். – சிபிஎம் உ.வாசுகி கோபம்.

Published on 01/08/2018 | Edited on 27/08/2018
salem 8 way

 

 

 

சேலம் – சென்னை வரையிலான எட்டுவழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும்மென இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகஸ்ட் 1ந்தேதியான இன்று திருவண்ணாமலையில் இருந்து சேலத்துக்கு, என் நிலம் – என் உரிமை என்கிற பெயரில் நடைபயணம் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

மூன்றாயிரத்துக்கும் அதிகமான சிபிஎம் தொண்டர்கள், விவசாயிகள், பெண்கள் என வருகை தந்துயிருந்தனர். 8 வழிச்சாலையை எதிர்த்தும், அதனை செயல்படுத்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசை எதிர்த்தும், தமிழக அதிமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

 

 

 

இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி பேசும்போது, அரசை விமர்சிக்ககூடாது, மாற்று கருத்துக்கூறக்கூடாது, வாய் மூடிக்கிடக்க வேண்டும், ஒருங்கிணைந்து செயல்படக்கூடாது என்கிறது போலிஸ். இந்த அதிகாரத்தை இவர்களுக்கு யார் தந்தது. வெளியாட்கள் வரக்கூடாது என்கிறார்கள். நாங்கள் என்ன செவ்வாய் கிரகத்தில் இருந்து வருகிறோமா அல்லது அமெரிக்காவில் இருந்து வருகிறோமா. பக்கத்து மாவட்டத்தில் இருந்து பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவு தர வருகிறோம். நாங்கள் வரக்கூடாது எனச்சொல்ல நீங்கள் யார்?,

 

நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது மோடிக்கும், எடப்பாடிக்கும் தெரியாதா?. முடியாட்சி போல் ஆட்சியை நடத்துகிறார்கள். அதை என்றும் இந்த செங்கொடி தோழர்கள் ஏற்கமாட்டார்கள். எங்கள் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சங்கர், விவசாயிகளை சந்திக்க கட்சி நிர்வாகிகளுடன் உத்திரமேரூர் சென்றபோது, காஞ்சிபுரம் ஏடிஎஸ்.பி நீ உள்ளே வரக்கூடாது என்றுள்ளார். உள்ளே வரக்கூடாது எனச்சொல்வதற்கு நீங்கள் என்ன பிரிட்டிஷ் கால போலிஸ்சா எனக்கேட்டபோது, ஆமாம் நாங்கள் பிரிட்டிஷ் கால போலிஸ் தான் என மிரட்டியுள்ளார். மோடியும், எடப்பாடியும் கார்ப்பரேட்களுக்காக வேலை செய்கிறீர்கள். உங்களின் கனவை நாங்கள் கலைப்போம் செங்கொடி ஏந்தும் நாங்கள் என்றார்.

சார்ந்த செய்திகள்