Published on 11/05/2022 | Edited on 11/05/2022

தனியார் வாகனங்களில் வாகன பதிவெண் பலகையில் அரசாங்கத்தை குறிப்பிடும் G (Govt ) மற்றும் அ ( அரசாங்கம்) என்ற எழுத்துக்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு வாகனங்களை தவிர தனியார் வாகனங்களில் G மற்றும் அ என்ற எழுத்துக்களை பயன்படுத்த கூடாது. அதேபோல் அரசுடமை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வாகனங்களிலும் G மற்றும் அ என்ற எழுத்துக்களை பயன்படுத்த கூடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.