உக்ரைன்- ரஷ்யா போர் காரணமாக உக்ரைனில் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை பயின்று வந்த மாணவர்கள் தொடர் முயற்சிகள் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து இந்தியாவில் படிப்பை தொடர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக அனுமதிகோரி உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள், கல்வியாளர்கள் தரப்பில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் உக்ரைனிலிருந்து இந்தியா வந்த மாணவர்கள் இந்திய பல்கலைக்கழகங்களில் படிப்பைத் தொடர முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 'உக்ரைன்- ரஷ்யா போர் காரணமாக உக்ரைனிலிருந்து இந்தியா வந்த மாணவர்கள் மருத்துவம் உள்ளிட்ட கல்விகளை இந்தியாவிலேயே தொடர மத்திய அரசு உதவ வேண்டும். அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். வெளிநாடுகளில் படிப்பை தொடர விரும்பும் மாணவர்களுக்கு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களை அடையாளம் காண கட்டமைப்பு உருவாக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.