அதிமுக மற்றும் திமுக கட்சிகள் ஒரே நேரத்தில் தேர்தல் அறிக்கையை வெளியீட்டது. அதில் இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் சில சலுகை விவரங்கள் ஒரே மாதிரியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.இதனை தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தேர்தல் அறிக்கையை டிடிவி .தினகரன் நேற்று வெளியீட்டார்.
இதில் பொறியியல் படித்த இளைஞர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும் வகையில் நிபுணர்கள் குழு அமைக்கப்படும் எனவும் , தமிழகத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பொருட்கள் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்படும் எனவும் , தமிழகத்தில் உள்ள மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் சுமார் 80% விழுக்காடு தமிழக இளைஞர்கள் பணியமர்த்தும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் , தமிழகத்தில் மது உற்பத்தி ஆலைகள் செயல்படாது என தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டிடிவி அறிவித்த தேர்தல் அறிக்கையில் இது போன்ற சில விசயங்கள் திமுக மற்றும் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறவில்லை என்பது அனைவரும் அறிந்தது ஆகும்.
பி . சந்தோஷ் , சேலம் .