சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 18 எம்.எல் .ஏக்கள் தீர்ப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசுகையில்,
18 எம்.எல்.ஏக்களை நீக்கியது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர்கள் இந்த தீர்ப்பிற்கு மேல்முறையீடு செய்கிறார்களா? இல்லையா? என்பது குறித்து எங்களுக்கு அக்கறையும் இல்லை கவலையும் இல்லை. ஆனால் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகள் உட்பட இந்த 18 தொகுதிகளும் சேர்த்து மொத்தம் 20 தொகுதிகளில் எம்.எல் ஏக்கள் இல்லாத நிலை இருக்கிறது. அந்த தொகுதிகளில் எந்த பணிகளும் நடைபெறாமல் இருக்கும் நிலை இருக்கிறது. எனவே ஜனநாயக நிலையை கருதி அந்த 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் உடனடியாக மாநில தேர்தல் ஆணையம் நடத்தவேண்டும் 20 தொகுதிகளை காலியாக வைத்திருக்காதீர்கள் என மதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன் எனக்கூறினார்.