திருச்சியில் கிராமாலயா தொண்டு நிறுவனம் சார்பில் 10 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 5 பல்நோக்கு கண்காணிப்பு மானிகள், 30 குளிர்பதன பெட்டிகள், 30 வெந்நீர் விநியோக எந்திரங்கள், ஆயிரம் நாடித்துடிப்பும் ஆணிகள் 1000 கருவிகள், 1000 டிஜிட்டல் வெப்பமானிகள் மற்றும் 5000 கிருமி நாசினி மற்றும் துணி ஆடைகள் ஒரு குளிர்சாதனப் பெட்டி மற்றும் கையுறை வழங்கினர். இதனை வழங்கும் விழா திருச்சி சுகாதார துணை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கலந்துகொண்டு உபகரணங்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “பொதுத்தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து சிறப்பு குழுவிடம் கலந்து ஆலோசித்து உள்ளோம். அது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும். பன்னிரண்டாம் வகுப்பு அமைப்பது தொடர்பாக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது, இரண்டு வாரம் அதற்காக கூறப்பட்டது. சி.பி.எஸ்.சி மதிப்பெண் எப்படி வருகிறதோ, அதேபோன்று கணக்கில் மதிப்பெண் வழங்கப்படும். அவற்றை கணக்கில் கொண்டு நாம் விட்டு விட்டதை எடுத்துக் கொண்டு இருக்கிறார்களா அல்லது அவர்கள் எதை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கணக்கில் கொண்டு மதிப்பெண் வழங்கப்படும்.
பள்ளி கட்டணம் தொடர்பாக பல புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. அதிகப்படியாக கட்டணம் வசூலித்து வருகின்றனர். அதிகப்படியான பள்ளியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. எங்கெல்லாம் இதுபோன்ற புகார் வருகிறதோ அந்த மாவட்ட கல்வி அதிகாரி அழைத்து கண்டிக்க உள்ளோம். கடந்த முறை செப்டம்பர் மாதம் நீதிமன்றமும் அவர்களை கண்டித்துள்ளது. நீதிமன்றம் அது தொடர்பாக வழக்கு பதிவு செய்த அல்லது அபராதம் விதித்து இருந்தாலும் அதனடிப்படையில் நாம் சென்றிருக்கலாம். தற்பொழுது மாணவர்களுக்காக பள்ளி நிர்வாகத்தை விட்டுவிட முடியாது, நிர்வாகத்திற்காக பள்ளி மாணவர்களை விட்டுவிட முடியாது.
கல்விக் கட்டணம் கட்டாததால் ஆன்லைன் மூலம் பயிலும் மாணவர்களுக்கு கல்வி கற்பித்து கொடுப்பது குறித்து புகார் வரும் போது அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். படிப்படியாக தற்போது கரோனோ நோய்த்தொற்று குறைந்து வருகிறது எனவே முதல்வருடன் கலந்தாலோசித்த பின்னர் பள்ளி திறப்பது குறித்து தெரிவிக்கப்படும் என கூறினார். மேலும், திமுக தேர்தல் அறிக்கையில் மாணவ, மாணவியருக்கு டேப் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் இரண்டு லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படாமல் உள்ளது. அவர்களையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கும் சேர்த்து நடப்பு கல்வியாண்டில் அனைவருக்கும் டேப் வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம் என தெரிவித்தார்.