Published on 30/07/2018 | Edited on 30/07/2018


திமுக தலைவர் கலைஞர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நலம் குறித்து அறிய காவேரி மருத்துவமனைக்கு இலங்கை எம்.பி. ஆறுமுகம் தொண்டமான் மற்றும் அமைச்சர் செந்தில் தொண்டமான் இன்று வந்தனர். மருத்துவமனையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த அவர்கள், கலைஞரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.
அதனைத் தொடர்ந்து, கலைஞர் உடல் நலம் பெற இலங்கை அதிபர் சிறிசேனா அளித்த கடிதத்தை ஸ்டாலினிடம், ஆறுமுகம் தொண்டமான் மற்றும் செந்தில் தொண்டமான் ஆகியோர் வழங்கினர்.