கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த செம்பளக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள ரயில்வே சுரங்கபாதை கடந்த 2014 ஆம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
இந்த சுரங்கபாதை வழியாக 8 கிராம மக்கள் விவசாயிகள், பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும் நகர பகுதிக்கு சென்று வருகின்றனர்.
பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளும் அவ்வழியே கிடக்கின்றனர்.
அதேசமயம் மழைகாலங்களில் சுரங்கபாதை முழுவதும் தண்ணீர் சூழ்வதால், முற்றிலுமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் சுமார் 50-கிலோமீட்டர் தொலைவிற்கு சுற்றி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து ரயிலவே நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் என அனைவரிடமும் மனு கொடுத்தும், போராட்டங்கள், சாலை மறியல் செய்தும், கடந்த 3 வருடங்களாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 8 கிராம மக்கள் தங்களுக்கு சுரங்க பாதை வேண்டாம் என்று செம்பளக்குறிச்சி சுரங்கபாதை மேல் செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் சுமார் 1000-த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டனர்.
காவல்துறை கண்கானிப்பாளர், சார் ஆட்சியர், வருவாய் வட்டாட்சியர் என அனைவரும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். ஆனால் பொதுமக்கள் தங்களது கோரிக்கையில் உறுதியாக இருந்தனர். மேலும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழுக்கங்கள் எமுப்பியவாறு தண்டவாளத்தில் அமர்ந்து இருந்தனர். இதனால் சுமார் 2 மணி நேரமாக திருச்சி-விழுப்புரம் செல்லும் பயணிகள் ரயில் மற்றும் மதுரை-சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. பின்னர் திருச்சி கோட்ட பொறியாளர் கார்த்திகேயன், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு, தற்காலிகமாக இரண்டு, நான்கு சக்கர வாகனம் செல்வதற்கு தரைப்பாலம் அமைத்து தருகிறோம் என்று உறுதி அளித்தன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
சுமார் இரண்டு மணி நேரத்திர்கு பின் பயணிகள் மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் செம்பளக்குறிச்சி சுரங்கபாதையை கடந்து சென்றது.