Skip to main content

தெருக்களில் மின்விளக்கு எரியாததால் தீப்பந்தம் ஏற்றி வாழ்ந்து வரும் மக்கள்! 

Published on 01/10/2019 | Edited on 01/10/2019

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட 13- வது வார்டில் உள்ள அண்ணாநகர், கபிலர் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் கடந்த ஆறு மாதங்களாக தெரு மின் விளக்குகள் எதுவும் தெரியாததால், இரவு நேரங்களில்  இருள் சூழ்ந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் தினந்தோறும் பயத்தில் வாழ்ந்து வருவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.  

virudhachalam 13 ward peoples not get basic facilities


இதனால் தெரு மின்விளக்குகள் சரிசெய்ய கோரி விருத்தாசலம் நகராட்சியில் பல முறை புகார் மனு அளித்தும், முறையிட்டும் நகராட்சி அதிகாரிகள் எதுவும் கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டி வந்துள்ளனர். இதனால் செய்வதறியாது  அப்பகுதி மக்கள்  இரவு முழுவதும் தீப்பந்தம் ஏற்றி தங்களின் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர்.  விருத்தாசலம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் உள்ள அண்ணாநகர் பகுதியில் மட்டும் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தருவதில்லை என்றும், குடிநீர், மின்சாரம், கழிவுநீர் வாய்க்கால், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவதில் மிகவும் காலம் தாழ்த்தி வருகின்றனர் என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த வாரத்தில் இப்பகுதியில்  இரண்டு மாடுகள் மற்றும் இரண்டு பைக்குகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது. அந்த பகுதியில் இரவு நேரத்தில் பெண் சிறுமிகள் நடமாடும் போது மர்ம நபர்கள் சில்மிஷத்தில் ஈடுபடும் செயல்களும் நடந்தேறி வருகிறது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் தக்க  நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த கட்டமாக மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுப்பட போவதாக அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



 

சார்ந்த செய்திகள்