Published on 24/08/2019 | Edited on 24/08/2019
மத்திய அரசு கொண்டுவந்த மோட்டார் வாகன சட்டத்திருத்தை திரும்பபெற கோரி அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மோட்டார் வாகன சட்டதிருத்தத்தின்படி ஆட்டோ வாகன பதிவுக் கட்டணம் உட்பட வாகனங்களுக்கான பல்வேறு கட்டணங்கள் பண்மடங்கு அதிகரித்துள்ளது. இதனை கண்டித்து இன்று (24.08.2019) சென்னையிலுள்ள வள்ளுவர்கோட்டம் பகுதியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆட்டோ, டாக்ஸி, லாரி உட்பட அனைத்து வாகன உரிமையாளர்களும், ஓட்டுநர்களும் இணைந்து ஆர்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மோட்டர் வாகன சட்டதிருத்தத்தை திரும்ப பெறவேண்டும், பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டி க்குள் கொண்டுவரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.