Published on 10/09/2019 | Edited on 10/09/2019
விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட காமாட்சி அம்மன் கோயில் பகுதியில் 08.09.19-ந் தேதி அன்று சாலையோரத்தில் ஆதரவற்ற நிலையில் வயதான மூதாட்டி ஒருவர் உணவு தண்ணீர் கிடைக்காமல் தவித்து கொண்டிருந்தார். இதையறிந்த விழுப்புரம் மாவட்ட மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சுரேஷ்குமார் அவர்கள் மற்றும் காவலர் திருமதி. சத்யபிரியா ஆகியோர் அந்த மூதாட்டியை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து கஞ்சனூரில் உள்ள ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்த்தனர்.
வயதான காலத்தில் உறவினர்களால் கைவிடப்பட்ட மூதாட்டியை மீட்டு ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்த்த உதவி ஆய்வாளரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.திருமால் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.