Skip to main content

அமைச்சர் சி.வி. சண்முகத்தின் தங்கை மகன் தூக்கிட்டு தற்கொலை.

Published on 08/10/2019 | Edited on 08/10/2019

திண்டிவனத்தில் சட்டத்துறை அமைச்சர் சண்முகம், தங்கை மகன் அமைச்சரின் வீட்டின் மாடியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
தமிழக சட்டத்துறை அமைச்சராக இருந்து வருபவர் சி.வி. சண்முகம். 


இவர் திண்டிவனம் வால்டர் ஸ்கடர் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள மொட்டையன் தெருவில் வசித்து வருகிறார். இவரது தங்கை வள்ளி. இவரது மகன் லோகேஷ், 26; சென்னையில் பி.இ., படித்து முடித்துள்ளார். இவர்களும் அமைச்சரின் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று உணவு சாப்பிட்டு விட்டு, லோகேஷ், மேல் மாடியில் தூங்குவதற்கு சென்றுள்ளார்.  நேற்று (07/10/2019) காலை வரை, அவர் தூங்கியிருந்த அறை திறக்கப்பட வில்லை. காலையில் லோகேஷ் நேரம் கடந்து எழுந்து வருவது வழக்கம். இதே போன்று நேற்று (07/10/2019) காலை அவர் எழுந்து வெளியில் வரவில்லை. மதியம் கடந்தும் அவர் அறை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அமைச்சரின் உறவினர்கள், கதவை தட்டிப் பார்த்துள்ளனர். 

villupuram cv shanmugam son in law incident


அப்போதும், அவர் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, லுங்கியில், லோகேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து தகவலறிந்த ரோஷணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்தவரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சுப்ரமணியன், மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார், திண்டிவனம் டி.எஸ்.பி., கனகேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

villupuram cv shanmugam son in law incident


இதற்கிடையே தகவலறிந்த அமைச்சரின் அண்ணன் ராதா, தம்பி பாபு மற்றும் உறவினர்கள், திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். இரவு 7:00 மணியளவில், பிரேத பரிசோதனை முடிந்து, லோகேஷின் உடல் அமைச்சரின் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. எதற்காக லோகேஷ், தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து ரோஷணை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். அமைச்சர் சண்முகத்தின் தங்கை மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 


இந்த சம்பவம் அறிந்த அ.தி.மு.க., நிர்வாகிகள் அமைச்சரின் வீட்டின் முன்பு இன்றிரவு முழுவதும் திரண்டிருந்தனர். இதையொட்டி, அமைச்சர் வீட்டின் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்