Skip to main content

தூத்துக்குடி சம்பவத்தின் முக்கிய வழக்கான குற்ற வழக்கு எண் -191ன் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவு

Published on 30/07/2018 | Edited on 30/07/2018
tu

 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்குகள் அனைத்தும்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

 

உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சி.டி.செல்வம் - ஏ.எம்.பஷீர் அகமது முன்பு விசாரணைக்கு வந்த போது , தமிழக அரசு தரப்பில் தூத்துக்குடி வன்முறை சம்பவம் தொடர்பாக 274 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,43 பேருக்கு முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ளதாகவும்,250 பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளதாகவும், தற்போது 24 பேர் மட்டுமே சிறையில் உள்ளனர் எனவும்,கைது செய்யப்பட்ட நபர்கள் அனைவரும் கலவரத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஆவணங்கள் மற்றும் நேரில் பார்த்த சாட்சிகள் கூறியதன் அடிப்படையில் தான் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தமிழக அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார்.   அதனை தொடர்ந்து, கலவர நேரங்களில் காவல் துறையினர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பான விளக்க கையேடு தமிழக அரசு சார்பில் நீதிபதிகளிடம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து நீதிபதிகள்,

 

ஒரு இடத்தில் காவல்துறை துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்த வேண்டுமெனில் முதன்மை நீதிபதியின் உத்தரவை பெற்று தான் நிகழ்த்த வேண்டும் என நீதிபதிகள் கேட்ட கேள்விக்கு தமிழக அரசு வழக்கறிஞர்,

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை பொறுத்தவரை பணியில் இருந்த காவல் துறை அதிகாரிகளே துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவை பிறப்பித்தனர். ஏனென்றால் போராட்டக்காரர்கள் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தனர். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தினர். அதன் அடிப்படையில்தான் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என தமிழக அரசு வழக்கறிஞர் தனது வாதத்தில் தெரிவித்தார்.

 

மேலும்,144 தடை உத்தரவு பிறப்பிக்கும் செய்திகள் பொது மக்களுக்கு சென்று சேரும் அளவிற்கு முன்னதாக ஏன் பிறப்பிக்கப்படவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு தமிழக அரசு சார்பில், தூத்துக்குடியில் 100வது நாள் போராட்டம் மே 22ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மே 21ம் தேதி இரவு 8.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை வெளியிட்டார்.மேலும், அந்த செய்தி அனைத்து தொலைகாட்சி ஊடகங்கள், நாளிதழ்கள், சமூக வலைதளங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக தமிழக அரசு வழக்கறிஞர் தனது வாதத்தில் தெரிவித்தார்.

 

மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 243 வழக்குகளை காவல்துறை பதிந்து உள்ளது. இந்த வழக்குகள் அனைத்தையும் ஒரே வழக்காக எடுத்து விசாரிக்க முடியாது எனவும், அப்படி விசாரித்தால் வழக்குகளை விரைந்து விசாரிக்க முடியாது எனவும் தமிழக அரசு வழக்கறிஞர் வாதிட்டார். அதனை தொடர்ந்து அனைத்து வழக்குகளின் விசாரனையையும் நாளை ஒத்தி வைத்த நீதிபதிகள் நாளைய விசாரனையின் போது தூத்துக்குடி சம்பவத்தின் முக்கிய வழக்கான குற்ற வழக்கு எண் 191 ன் அனைத்து ஆவணங்கள் மற்றும் இணைய தள முடக்கம் சம்பந்தமான மறு ஆய்வு கூட்டத்தின் ஆவணங் களையும் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

“ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
issue of ration rice should be prevented says Edappadi Palaniswami

ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் வீட்டில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்ட ஆட்சியில் ஏற்கெனவே போதைப்புழக்கமும், அதுசார்ந்த குற்றங்களும் சர்வ சாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெடிகுண்டு கலாச்சாரமும் தலைவிரித்தாடுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் இந்த ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரேஷன் கடத்தல் கும்பல் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்குமாறும், ஏழை எளிய மக்களின் பசியாற்றும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.