ஈரோடு மாவட்ட பாமக., பொதுக்குழு கூட்டம் இன்று ஈரோட்டில் நடந்தது. அதில் கலந்து கொள்ள வந்த பாமக., நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் "சட்டசபையில் காந்தி, அம்பேத்கார், பெரியார்,ராஜாஜி, திருவள்ளுவர்,அண்ணா, காமராஜ், எம்ஜிஆர் உள்ளிட்ட 10 பேர் படங்கள் வைக்கப்பட்டுள்ளது. இதில், எம்ஜிஆர்., படம் மட்டும் ஜெயலிலதாவால் திறக்கப்பட்டது. மற்ற படங்கள் வெளிமாநில ஆளுனர்களால் திறக்கப்பட்டது. குற்றவாளியான ஜெ., படம் சட்டசபையில் வைக்க கூடாது என தொடர்ந்து வலியுறுத்தினோம். ஆனாலும், இன்று ஜெயலலிதா படம் திறக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சிகள் சொன்னாலும் அந்தப்படம் எடுக்கப்போவது கிடையாது. இது குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஓட்டு பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் மட்டுமல்ல. அவர்கள் கட்சியையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். தேர்தல் சீர் திருத்தம் செய்ய ஆணையம் முன் வர வேண்டும்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக துணை வேந்தர்கள் மட்டுமல்ல சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் சிபிஐ.,மூலம் விசாரனை செய்யப்படவேண்டும். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பணியை மத்திய அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும். கியாஸ் டேங்கர் லாரி ஸ்டிரைக்கால் கியாஸ் தட்டுபாடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஸ்டிரைக் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிமுக., திமுக., ஆகிய இரண்டு கட்சிகளும் ஊழல் கட்சிகள். அந்த இரண்டு கட்சிகளுடன் பா.ம.க. இனி கூட்டணி வைக்ககாது," என்றார்.
பேட்டியின் போது பா.ம.க. தலைவர் ஜி.கே.மணியும் உடன் இருந்தார்.
- ஜீவாதங்கவேல்