Skip to main content

திருவாரூர் நகரில் தனியார் டவர் அமைப்பதற்கு எதிராக பொதுமக்கள் மனு...

Published on 23/09/2019 | Edited on 23/09/2019

திருவாரூர் நகர் குடியிருப்பு பகுதிகளில் தனியார் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம்  அப்பகுதியை சேர்ந்த மக்கள் மனு அளித்தனர்.

 

thiruvarur people opposes tower construction

 

 

திருவாரூர் மாவட்டத்தில் இன்று குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது திருவாரூர் நகர் பகுதிக்குட்பட்ட ஸ்ரீதேவி நகர், மாருதி நகர், சந்துரு நகர் குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஸ்ரீதேவி நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டாக்டர் புவனேஸ்வரி என்பவர் அவருக்கு சொந்தமான இடத்தில் செல்போன் டவர் அமைப்பதற்கு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார். 

இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்காலிகமாக பணியை நிறுத்தி வைத்துள்ளனர்.

தற்போது மீண்டும் செல்போன் டவர் அமைக்கும் பணிக்கு ஏடிசி டெலிகாம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள்  கூறுகையில்.’’ குடியிருப்பு கட்டிடங்களுக்கு அருகில் 3 மீட்டர் இடைவெளியில் செல்போன் டவர் அமைப்பது இந்திய தொலைதொடர்பு சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். உடனடியாக பணியை தடுத்து நிறுத்தாவிட்டால்
அடுத்தகட்டமாக மிகப்பெரிய அளவில் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்.’’ என்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்