துவரங்குறிச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார் தேமுதிக தலைவர் மகன் விஜய பிரபாகரன்.
அப்போது அவர், நான் வந்ததை வாரிசு அரசியல் என்கிறார்கள், தேமுதிக உற்சாகமான நேரத்தில் வரவில்லை, சோதனை காலத்தில் தான் வந்துள்ளேன்.
எங்களுக்கு வந்த சொத்து பிரச்சனை ஊழல் செய்து வந்தது இல்லை. தன் சொந்த காசை வைத்து கல்வி சேவை செய்ததால் வந்தது. இதுகுறித்து எங்க அம்மா முழு விளக்கம் தந்துள்ளார்கள். காலஅவகாசம் கேட்டோம். அதனால் இந்த பிரச்சனை வந்துள்ளது.
தண்ணீர் பிரச்சனை உள்ளது. அதிமுக தண்ணீரை உற்பத்தி செய்யவில்லை. திமுகவாக இருந்தாலும், யாராக இருந்தாலும் மழை பெய்யவில்லை என்றால் இந்த பிரச்சனை வரும். அது இயற்கை என்றார்.
தேர்தல் முடிந்த பிறகு திமுக - காங்கிரஸ் இடையே சில கருத்து மோதல் வருவது பற்றிய கேள்விக்கு, அது அவர்கள் கட்சி, அவர்கள் கூட்டணி. இதில் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை என்றார்.