Published on 07/10/2019 | Edited on 07/10/2019
நாடாளுமன்ற தேர்தலில் புதிய தமிழகத்தை கூட்டணியில் சேர்த்துக்கொண்ட அதிமுக, இந்தமுறை கண்டுகொள்ளவில்லை. பட்டியல் வெளியேற்றம், 7 சாதிகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்ற அரசாணையை வெளியிட வேண்டும் என கிருஷ்ணசாமி, ஆளுந்தரப்புக்கு கோரிக்கை வைத்தார். ஆனால், அரசாங்கம் பதில் சொல்லாததால் இப்பொழுது வரைக்கும் கூட்டணியில் சேராமல் ஒதுங்கி இருக்கிறார்.
இதனிடையே, நாங்குநேரியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் அதிமுகவினர் புதிய தமிழகம் கட்சி கொடி, கிருஷ்ணசாமியின் புகைப்படம் இடம்பெற்ற பேனரை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என அந்த கட்சியின் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி செல்வக்குமார், நாங்குநேரி தேர்தல் நடத்தும் அலுவலர் நடேசனிடம் புகார் மனு அளித்துள்ளார்.