நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் சில இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இது குறித்து அந்த இயக்கத்தின் பொது செயலாளர் புஸ்ஸி என். ஆனந்து வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்வருமாறு..
"தமிழ்நாட்டில் நடைபெறும் 2022- ஆம் ஆண்டின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 'தளபதி' அவர்களின் உத்தரவின்படி, 'தளபதி விஜய் மக்கள் இயக்கம்' எந்த கட்சியுடனும் கூட்டணியோ, ஆதரவோ இல்லாமல் தனித்துப் போட்டியிடுகிறது. எனவே தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்காக அனைத்து மாவட்டத் தலைவர்களும், அணி தலைவர்களும், ஒன்றிய, நகர, பகுதி தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும், ரசிகர்களும், முழுமூச்சுடன் பிரச்சாரம் செய்து 'தளபதி' மற்றும் 'தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின்' மூலமாக செய்த நற்பணிகளை மக்களிடத்தில் கொண்டு சேர்த்து நம் இயக்கத்தின் வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளது.