
சர்கார் பட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவிட்ட நிலையில், படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதற்காக படம் மறு தணிக்கை செய்யப்படுகிறது. படம் திரையிட்ட தியேட்டர்களில் அதிமுகவினரின் போராட்டமும் தொடந்து நடைபெற்று வருகிறது.
சர்கார் சர்ச்சையில் நடிகர் விஜய்யை எச்சரித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ முதல்வருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்போம் என்று சட்ட அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இந்த பிரச்சனை குறித்து பேசுவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்திக்க நடிகர் விஜய் அனுமதி கேட்டிருப்பதாக தகவல்.
தலைவா பட பிரச்சனையின்போது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க கொடநாட்டிற்கே சென்றும், விஜய்யை சந்திக்க அனுமதி வழங்கவில்லை ஜெயலலிதா. ஆனால், இப்போது எடப்பாடி பழனிச்சாமி அனுமதி வழங்குவார் என்று கூறப்படுகிறது.