Published on 12/10/2019 | Edited on 12/10/2019
வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் வாங்காமல் அதிகாரிகள் வேலையே செய்வதில்லை. திருமணம் பதிவு செய்ய 5 ஆயிரம், வீடு, நிலம் பத்திரம் பதிவு செய்ய அதன் மொத்த தொகையில் 10 சதவிதம் என பத்திரப்பதிவு அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்கள். பணம் தரவில்லையென்றால் பத்திரப்பதிவு செய்வதில்லை. புரோக்கர்களின் ஆதிக்கம் அதிகமான உள்ளது என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர்ச்சியாக புகார்கள் சென்றது.
அதேபோல், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புரோக்கர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது, நேரடியாக வாகனப்பதிவு, லைசென்ஸ் வாங்க, புதுப்பிக்க வந்தால் செய்வதில்லை என்கிற குற்றச்சாட்டு இருந்தது.
இந்த புகார்களை தொடர்ந்து இரண்டு அலுவலகத்திற்குள்ளும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அக்டோபர் 11ந்தேதி மாலை வந்தனர். இந்த அலுவலகங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தவர்கள் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.