Skip to main content

வேங்கைவயல் விவகாரம்; 10 பேருக்கு சிபிசிஐடி சம்மன்

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

 vengaivayal incident CBCID summons 10 people

 

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக 10 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்வதற்காக வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 10 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதே சமயம் வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளைக் கண்டறிய டிஎன்ஏ பரிசோதனைகளையும் சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்