
சென்னை அடுத்த ஆவடியில் அமைந்துள்ள வேல் டெக் தனியார் கல்லூரியில் காட்சித் தொடர்பியல் துறையில் ‘ஃபோகஸ்’ எனும் மாணவர்களுக்கான ஊடகச் சங்கத்தை நேற்று (04/01/2019) தொடங்கினார்கள். இந்த தொடக்கவிழாவிற்கு திரைத்துறையை சேர்ந்த திரு. கௌஷிக் நரசிம்ஹன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேலும் வேல் டெக் கல்லூரியின் வேந்தர் டாக்டர் ஆர்.ரங்கராஜன் மற்றும் டாக்டர் சகுந்தலா ரங்கராஜன் ஆகியோர் தலைமையில் இந்த விழா நடைபெற்றது.
கல்வி நிறுவனத்திற்கும் திரைத்துறைக்கும் இருக்கின்ற இடைவெளியை நெருக்கமாக்குவதற்கு ஒரு பாலமாக ஃபோகஸ் எனும் மாணவர்களுக்கான ஊடகச் சங்கம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இது தொழில் வல்லுநர்கள், பயிற்சி பட்டறைகள், களப்பணியாளர்கள் மற்றும் போட்டிகள் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்திக்கொள்ளவும் உதவுகிறது. ஊடகத்திற்குள் நுழைய வேண்டும் என்று எதிர்ப்பார்க்கும் இளைய தலைமுறையினருக்கு திறமைகளை வளர்த்துகொள்ள உதவுவதே இச்சங்கத்தின் நோக்கமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் கலந்துகொண்டசிறப்பு விருந்தினர் கௌஷிக், தற்போது திரைத்துறையில் உள்ள வாய்ப்புகள் மற்றும் இன்றைய திரைத்துறையின் நிலைமை குறித்த விளக்கத்தை மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.