Published on 18/10/2019 | Edited on 18/10/2019
சிறை கைதிகளுக்கு எழுத்தறிவு பயிற்சி அளிக்கும் திட்டம் குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசாணையை வெளியிட்டது.
தமிழகத்தில் உள்ள எட்டு மத்திய சிறைச்சாலைகள் மற்றும் 20 கைதிகளுக்கு மேல் உள்ள மாவட்ட சிறைகளில் கைதிகளுக்கு தினமும் எழுத்தறிவு பயிற்சி. எழுத படிக்கத் தெரியாத 757 சிறைக் கைதிகளுக்கு ரூபாய் 14.60 செலவில் கைதிகளுக்கு எழுத்தறிவு திட்டத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு ஆசிரியர்களை கொண்டு தினமும் பயிற்சி அளிக்க திட்டம். இதில் குறிப்பாக முற்றிலும் எழுதப்படிக்க தெரியாத சிறை வாசிகளுக்கு மட்டுமே எழுத்தறிவு பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.