Published on 14/10/2020 | Edited on 14/10/2020
வெயிட்டேஜ் முறையில் 3,500 பேருக்கு ஆசிரியர் பணி வழங்க அரசு பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம், காட்பாடியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து தற்போது முடிவு எடுக்க முடியாது. ஆந்திராவில் பள்ளிகள் திறந்தவுடன் கரோனா தாக்கம் `அதிகரித்தது. தமிழகத்தில் கரோனா தாக்கம் குறைந்த பின்புதான் பள்ளிகளைத் திறப்பது குறித்து முடிவு எடுக்க முடியும். வெயிட்டேஜ் முறையில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 3,500 பேருக்கு ஆசிரியர் பணி வழங்க அரசு பரிசீலனை செய்து வருகிறது. குடியாத்தத்தை கல்வி மாவட்டமாக்க முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்". இவ்வாறு கூறினார்.