Skip to main content

இஸ்லாமிய சமுதாயத்திடம் சமாதானம் பேசி மூதாட்டி உடலை புதைக்க வைத்த அதிகாரிகள்

Published on 06/09/2019 | Edited on 06/09/2019

 

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி புதுமனை பகுதியை சேர்ந்தவர் கனகம்மாள். 70 வயதை கடந்த இவர் வயது முதிர்வு காரணமாக செப்டம்பர் 4ந்தேதி இறந்து விட்டார். இவரது உடலை ஐாப்ராபாத்-பள்ளிப்பட்டு இடையே உள்ள புதுமனை அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டா இடம் - அதாவது அரசுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் புதைப்பதற்காக குழி தோண்டிக் கொண்டிருந்தனர். இதனையறிந்த ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்த இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு வந்து இது தனியாருக்கு சொந்தமான இடம் என்றும், இதன் அருகே குடியிருப்பு பகுதி இருப்பதால் இங்கு புதைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
 

i

 

இதனால் அங்கு பதற்றம் நிலவியதால் உடனடியாக சம்பவ இடத்திற்கு வாணியம்பாடி தாலூகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் போலீசாரும், வாணியம்பாடி வட்டாட்சியர் முருகன், ஆதிதிராவிடர் நல வட்டாட்சியர் குமரேசன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

i

 

அப்போது அங்கு வருவாய்துறை அதிகாரிகள், ஜாப்ராபாத்திலிருந்து வந்து எதிர்ப்பு தெரிவித்த தரப்பினரிடம் சம்பந்தப்பட்ட இடம் 2003 ஆம் ஆண்டு பள்ளிப்பட்டு மற்றும் மதனாஞ்சேரி பகுதியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மயானம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, அந்த இடத்தை தர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையறிந்த சம்பந்தபட்ட நில உரிமையாளர் நிலம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். 2 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கில் நீதிமன்றத்தில் நில உரிமையாளர் ஆஜராகாததால் அரசுக்கு சாதமாக தீர்ப்பு அளிக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்தப்பட்டது.

 

இந்நிலையில் சம்பந்தப்பட்ட பகுதியை சேர்ந்த மக்கள் அருகாமையில் உள்ள ஏரிகளிலும், இதர பகுதிகளிலும் இதுநாள் வரையில் தங்கள் பகுதியில் இறப்பவர்களை அடக்கம் செய்தும், எரியூட்டியும் வந்தனர். நீர்நிலைப்பகுதிகளில் பிணங்களை அடக்கம் செய்யவோ, எரியூட்டவோ கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் ஏற்கனவே அரசின் சார்பில் மதனாஞ்சேரி அருந்ததியினர் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இந்த பிணத்தை புதைக்க ஈடுப்பட்டுள்ளனர் என அவர்களிடம் விளக்கி கூறினார்கள். மேலும் இந்த இடம் தொடர்பாக ஏதாவது தேவைபடின் நீதிமன்றத்தை அணுகும்படி கூறியதையடுத்து 3 மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர். இதனையடுத்து கனகம்மாள் உடலை மாலை 4 மணியளவில் புதைக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

சார்ந்த செய்திகள்