கர்நாடகா மாநிலம் கே.ஜி்.எப் நகரை சேர்ந்த சூசையப்பா நகரில் வசிக்கும் தேவசகாயம் ஜோசப் தலைமையில் 40 பேர் கொண்ட கிருஸ்துவர்கள் வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு மாதா சிலையை ஒரு வாகனத்தில் வைத்து பாதயாத்திரையாக வந்தனர்.
வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகேயுள்ள பங்களாமேடுக்கு ஆகஸ்ட் 17ந்தேதி இரவு வரும்போது, வழியில் மடங்கிய அதேபகுதியை சேர்ந்த இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த பிரபு, சிவக்குமார், சிங்காரவேலன், சாமூண்டிஸ்வரன், மணி, இளங்கோவன் என 6 பேரும் பாதயாத்திரையாக வந்த குழுவிடம் தகராறு செய்துள்ளனர். அதோடு, அந்த சிறிய வண்டியை உடைத்ததோடு, மாதா சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
மாதா சிலை மற்றும் வண்டியை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து நாட்றம்பள்ளி காவல்நிலையத்தில், பாத யாத்திரை வந்த கிருஸ்துவர்கள் குழு புகார் எழுதி தந்துள்ளனர். அந்த புகாரின் பேரில் நாட்றம்பள்ளி போலிசார் சம்மந்தப்பட்ட 6 பேரை கைது செய்தனர். அவர்களை ஆம்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கதிரவன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.