மறைந்த வீரப்பன் மனைவி முத்துலட்சுமி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முத்துலட்சுமி, சமீப காலமாக சண்முகப்பிரியா என்ற பெண்மணி வீரப்பனை தான்தான் பிடித்துக் கொடுத்தார் என்றும், இதற்கு தமிழக அரசு 5 கோடி ரூபாய் வழங்காமல் தன்னை ஏமாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து சண்முகப்பிரியாவிற்கு வீரப்பனை எந்த விதத்திலும் தெரியாது. கடந்த 1992ம் ஆண்டு பாலாறு பாலத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 21 நபர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு இதுவரை உரிய இழப்பீடு வழங்காமல் உள்ளது என்று குற்றம் சாட்டினார்.
சண்முகப்பிரியாவுக்கு அரசாங்கம் 5 கோடி ரூபாய் வழங்கினால் இறந்து போன 21 நபர்களின் உறவினர்கள் மற்றும் அவரது குடும்பத்தாரை ஒன்று சேர்த்து சென்னை தலைமைச் செயலகம் முன்பும், சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பும் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தார்.