Skip to main content

நிர்மலாதேவி விரைவில் நார்மல்! -மனநல மருத்துவர் சொன்ன தகவல்!

Published on 22/07/2019 | Edited on 22/07/2019

 

கடந்த 8-ஆம் தேதி,  கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மன்றத்தில் நிர்மலாதேவி சார்பில் விடுப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனாலும், தாமதமாக அந்நீதிமன்றத்துக்கு வந்தார். ‘நான் பேசல.. காமாட்சி அம்மன் பேசுறாங்க..” என்று பிதற்றி,  நீண்ட நேரமாக கோர்ட் வளாகத்தில் அமர்ந்து பரபரப்பை உண்டு பண்ணினார். அதே நாளில், அருப்புக்கோட்டையில் தர்கா ஒன்றில், தலைவிரிகோலத்தில் அமர்ந்து புலம்பினார். பெண் காவலர்கள் வந்து அவரை இழுத்துச்சென்று வீட்டில் கொண்டுபோய் விடவேண்டிய நிலை ஏற்பட்டது. 

 

n

 

அடுத்து, அருப்புக்கோட்டை வழக்கறிஞர் ஜோபு ராம்குமாரிடம் நிர்மலாதேவி பேசிய ஆடியோ வெளிவந்தது. அதில்,  உளவியல் சிகிச்சைக்காகத் தன்னை மனநல மருத்துவமனையில் சேர்த்துவிடும்படி அவர் கெஞ்சியதை அவரது வாய்ஸிலேயே கேட்க முடிந்தது. 

 

அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்த வழக்கில் இன்று நிர்மலாதேவி ஆஜராக வேண்டியதிருந்தது. உதவிப் பேராசிரியர் முருகனும் கருப்பசாமியும் ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில்  ஆஜரான நிலையில், நிர்மலாதேவி சார்பில் வழக்கறிஞர் தங்கராஜ் விடுப்பு மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

 

நிர்மலாதேவி நீதிமன்றத்தில் ஆஜராகாததற்குக் காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. மன அழுத்தத்தால் விரக்தியின் உச்சத்துக்குச் சென்ற அவர், உளவியல் சிகிச்சை பெறுவதற்காகத் தென்மாவட்டத்திலுள்ள ஒரு மனநல மருத்துவமனைக்குத் தானாகவே சென்றிருக்கிறார்.  அவருக்காக மருத்துவமனை பதிவேட்டில் கையெழுத்துப் போடுவதற்குக்கூட உறவினர் யாரும் முன்வரவில்லை. அதனால், அம்மருத்துவமனை வேறொரு பிரிவில் நிர்மலாதேவியை சிகிச்சைக்காக அனுமதித் திருக்கிறது. சிறிய அளவிலான மனநலப் பிரச்சனைதான். நான்கு வித உளவியல் சிகிச்சைக்கு உட்படுத்தினால் அவர்  விரைவிலேயே நார்மல் ஆகிவிடுவார் என்று அந்த மருத்துவர் கூறிய தகவலை வழக்கறிஞர் ஒருவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். 


 

சார்ந்த செய்திகள்