Skip to main content

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - பாஜகவினர் மோதல்: 6 பேர் காயம்

Published on 11/12/2017 | Edited on 11/12/2017
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - பாஜகவினர் மோதல்: 6 பேர் காயம்

சீர்காழியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 6 பேருக்கு காயம் ஏற்பட்டது. கலவரம் செய்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 25 பேரை போலீசார் து செய்துள்ளனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் "இந்துக்களின் கோயில்களை இடிக்க வேண்டும்" என சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக்கூறி, தமிழகம் முழுவதும் அவரைக் கண்டித்து இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். "நான் அப்படி கூறவில்லை  என்னுடைய பேச்சை திரித்து அரசியல் லாபம் தேட வகுப்புவாதிகள் முற்படுவதாக" திருமாவளவன் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கோபிநாத், என்பவர் " இந்து கோயில்களை இடிக்க வேண்டும் என பேசிய திருமாவளவனின் தலையை வெட்டி கொண்டுவரும் நபருக்கு எங்களது அமைப்பின் சார்பாக ரூபாய் 1 கோடி பரிசு அளிக்கப்படும்" என்று அறிவித்தார். அந்த பேச்சு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கோபிநாத்தை உடனே கைது செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

அதனை தொடர்ந்து இந்து முன்னேற்றக் கழக தலைவர் கோபிநாத் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்திருக்கின்றனர். இந்த நிலையில் பா.ஜ.கவினர், திருமாவளவனை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான இடங்களில் ஆர்பாட்டம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நாகை மாவட்டம்  சீர்காழி  மணிமண்டபம் வாசலில் போராட்டம் மற்றும் கொடும்பாவி எரிக்கும் போராட்டத்திற்கு தயாராகினர். 
அப்போது அங்கு வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருப்பாளர்கள், போராட்டம் வேண்டுமானால் செய்து கொள்ளுங்கள், கொடும்பாவி எரிக்க கூடாது என பேசிக் கொண்டிருக்கும் போதே இரண்டு தரப்பிற்கும் கைகலப்பாகி, அடிதடியாக மாறியது. இந்த மோதலில் இரண்டு தரப்பிற்கும் காயம் ஏற்பட்டது. ஐந்து பேருக்கு காயம் ஏற்பட்டது. 

போராட்டத்திற்கு அனுமதி வாங்கியிருப்பதாகவும், வேண்டுமென்றே அடிதடி, கலவரத்தை மூட்டியதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 25 பேரை கைது செய்துள்ளனர். முக்கிய பொருப்பாளர்கள் வழக்கறிஞர் வேலு குணவேந்தன் உள்ளிட்ட பலரையும் காக்கிகள் அடித்து வேனில் ஏற்றினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கண்டித்து பா.ஜ.க வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சீர்காழியில் பரபரப்பு நிலவியது. 

க. செல்வகுமார்.

சார்ந்த செய்திகள்