சிதம்பரத்தில் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காட்டுமன்னார்கோவில் தொகுதி வி.சி.க. எம்.எல்.ஏ. சிந்தனைச்செல்வன் ஆய்வு மேற்கொண்டார். இதில், வகுப்பறைகள், நூலகம், சமையலறை உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்டார். மேலும் பள்ளியில் மாணவர்களுக்குத் தேவையான வசதிகள் என்ன செய்ய வேண்டும் என ஆசிரியர் மத்தியில் கேட்டறிந்தார்.
அப்போது அவர், “நந்தனார் பள்ளியில் உள்ள விடுதியை உயர்தரமான விடுதியாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாணவர்களுக்குச் சுற்றுச்சுவர் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்படும். தற்போது இந்த பள்ளிக்காக ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனைப் பள்ளியின் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதற்காக அனைத்து வேலைகளும் நடைபெற உள்ளது” என்று தெரிவித்தார்.
இவருடன் சிதம்பரம் கல்வி மாவட்ட அலுவலர் கன்னிசாமி, பள்ளியின் தலைமை ஆசிரியர் குகநாதன் உள்ளிட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் பால. அறவாழி, மாநில நிர்வாகி நீதிவளவன் உள்ளிட்ட கட்சியினர் உடனிருந்தனர்.