Skip to main content

‘தடைசெய்யப்பட்ட ரகசியம்’ - வெளிக்கொண்டு வரும் விஜய்யின் மகன்

Published on 29/11/2024 | Edited on 29/11/2024
jason sanjay movie update

விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், கனடா பல்கலைக்கழகத்தில் சினிமா துறை சம்பந்தமாகப் படித்து வந்தார். இவர் குறும்படம் இயக்கும் புகைப்படங்கள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இயக்கம் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாகச் சொல்லப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இயக்குநராக அவர் அறிமுகமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.   

இப்படத்தை லைகா தயாரிப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இதில் கதாநாயகனாக கவின், துல்கர் சல்மான் உள்ளிட்ட சில நடிகர்களின் பெயர் அடிப்பட்டது. ஆனால் அறிவிப்புக்கு பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. பின்பு ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருவதாக சொல்லப்பட்ட நிலையில் கிரிக்கெட் கதைகளத்தில் இந்தப் படம் உருவாகுவதாக தகவல் வெளியானது. 

இந்த நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்க தமன் இசையமைக்கவுள்ளார். மேலும் பிரவீன் கே.எல். படத்தொகுப்பு செய்கிறார். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ளதாகவும் விரைவில் படப்பிடிப்பு நடக்கவுள்ளதாகவும் மோஷன் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மோஷன் போஸ்டரில், ‘தடைசெய்யப்பட்ட ரகசியம்’(Forbidden Secret) என்ற புத்தகம் இடம்பெற்றுள்ளது. அதனால் இதுவரை சொல்லப்படாத கதையை ஜேசன் சஞ்சய் இப்படம் மூலம் வெளிகொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்