வேலூர் சிறையில் கடந்த 6 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த முருகன், உயர்நீதிமன்றத்தின் கோரிக்கையை ஏற்று, உண்ணாவிரதத்தை திரும்ப பெற்றார் என்று அவரது வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கடந்த 29 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில், கடந்த மாதம் 18ம் தேதி அன்று முருகன் அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாக சிறைத்துறை கூறியது. இதையடுத்து முருகன் தனிமைச்சிறைக்கு மாற்றப்பட்டார்.
இதையடுத்து, சிறையில் இருந்து செல்போன் பறித்ததாக தம்மீது வேண்டுமென்றே வழக்கு போட்டு, தனிமைச்சிறையில் அடைத்துள்ளனர் கூறி, தன்னை சென்னை புழல் சிறைக்கு மாற்றவேண்டும் என்று கோரி, கடந்த 11ம் தேதி முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டார் முருகன்.
ஐந்து நாட்களுக்கு பின்னர், உயர்நீதிமனத்தின் கோரிக்கையினை ஏற்று, முருகன் உண்ணாவிரதத்தை கைவிட்டார் என்று அவரது வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.