Skip to main content

ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்ற வேன் விபத்து; 10 பேர் காயம்!

Published on 29/05/2024 | Edited on 29/05/2024

 

பெங்களூருவைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 8 பேர்கள் சேர்ந்து ஒரு டூரிஸ்ட் வேனில் தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்களுக்கும் சுற்றுலா சென்று வந்தனர். அந்த வகையில், நேற்று மாலை, அவர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்குச் சென்றுள்ளனர். வரதராஜன் (27) என்பவர் வேனை ஓட்டியுள்ளார்.

மாலை 6 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே துரையரசபுரம் அருகே வேன் சென்ற போது  ஏத்தநாடு கிராமத்தைச் சேர்ந்த  சந்தோஷ்(20) மோட்டார் சைக்கிளில் கடைகளில் மிட்டாய் ஆர்டர் எடுக்கச் சென்றுவிட்டு திரும்பும் போது மோட்டார் சைக்கிளிலும் வேனும் நிலைதடுமாறிய நிலையில் ஏற்பட்ட விபத்தில் வேன் கவிழ்ந்தது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற சந்தோஷ் மற்றும வேனில் சென்ற தேவராஜ் (50), புனிதா (38), வரதராஜ் (27), சேத்தான் (24), ஜெயா ஸ்ரீ (30), ராஜம்மாள் (75), சந்தோஷ் (40), ஹரி (17) உள்ளிட்ட 9 பேர் படுகாயமடைந்தனர்.

அந்த வழியாகச் சென்றவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்கள் மூலம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் தலைமை மருத்துவர் சேகர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். சம்பவம் குறித்து ஆவுடையார்கோயில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்