Skip to main content

வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி மனு: அவகாசம் கேட்ட காவல்துறை

Published on 07/08/2017 | Edited on 07/08/2017
வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி மனு: அவகாசம் கேட்ட காவல்துறை

சேலம் பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரிய மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் வரும் 21 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் போராட்டங்களுக்கு ஆதரவாக துண்டு பிரச்சுரம் விநியோகித்து மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டியதாக கடந்த மாதம் 12 ம் தேதி சேலம் பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதியை சேலம் காவல்துறையினர் கைது செய்தனர்.

இவருக்கு எதிராக பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும், தேச  நலனுக்கு எதிராக செயல் பட்டதாக கூறி அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சேலம் மாவட்ட ஆட்சியர் கடந்த மாதம் 17ம் தேதி உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து அவரது தந்தை மாதையன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நீதிபதிகள் செல்வம், கலையரசன் முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய காவல்துறை சார்பில் அவகாசம் கேட்கப்பட்டதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 21 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

சி.ஜீவா பாரதி

சார்ந்த செய்திகள்